Homeசெய்திகள்தமிழ்நாடு'லியோ' பட சிறப்பு காட்சி விவகாரம்- அமைச்சர் ரகுபதி விளக்கம்!

‘லியோ’ பட சிறப்பு காட்சி விவகாரம்- அமைச்சர் ரகுபதி விளக்கம்!

-

- Advertisement -
kadalkanni

 

'லியோ' பட சிறப்பு காட்சி விவகாரம்- அமைச்சர் ரகுபதி விளக்கம்!
Video Crop Image

‘லியோ’ திரைப்பட விவகாரம் குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.17) காலை 10.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதில்லை; திரையுலகம் எங்கள் நட்பு உலகம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் 4 மணி காட்சியுடன் சேர்த்து 6 காட்சிகளுக்கு அனுமதி தரப்படும்.

நிலவில் பிரக்யான்-பூமியில் பிரக்யானந்தா- இஸ்ரோ தலைவர் பெருமிதம்

திரைத்துறையை முடக்கவில்லை; சிறிய தயாரிப்பாளர்களை கூட இந்த அரசு ஊக்குவிக்கிறது. சினிமாவிற்கு தடைப்போட்டு திரையுலகின் விரோதப் போக்கை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம். நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாலை 04.00 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும். லியோ படத்திற்கு நாளொன்று 5 சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் திரைத்துறைச் செழிப்பாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

‘லியோ’ படத்தின் அதிகாலை 04.00 மணி காட்சிக்கு அனுமதியில்லை- சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

அத்துடன், தி.மு.க. ஆட்சியில் திரைத்துறை முடக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் குற்றச்சாட்டு அமைச்சர் ரகுபதி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

MUST READ