Homeசெய்திகள்தமிழ்நாடுசவாலான இந்த பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்..... முதல்வர் ஸ்டாலின்!

சவாலான இந்த பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்….. முதல்வர் ஸ்டாலின்!

-

சவாலான இந்த பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்..... முதல்வர் ஸ்டாலின்!சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வலுப்பெற்று மிரட்டி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் புயலின் எதிரொலியாக, பாதுகாப்பு காரணங்கள் கருதி மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், பொது விடுமுறை அளிக்கப்பட்டும் வருகின்றன. கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு மழையின் அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். கனமழையின் காரணமாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்களின் குடியிருப்புகள் போன்ற இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவுகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “வரலாறு காணாத மழையை கொட்டி தீர்த்து வரும் இந்த மிக்ஜாம் புயல் பேரிடரில் இருந்து மீள்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் ஆகியோர் கைகோர்த்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நிவாரண பணிகளை துரிதப்படுத்துவதற்காக 13 அமைச்சர்களை நியமத்தியுள்ளேன். கூடுதல் பணியாளர்களும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சவாலான இந்தப் பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர்கொண்டு அனைவருக்கும் உதவி செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ