ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம்
சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 வகையான பொருட்களை ஒப்படைக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடகா அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவாலி ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க, வைர நகைகளை தவிர மற்ற எதுவும் கர்நாடகா நீதிமன்றத்தில் இல்லை என வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். தமிழக லஞ்ச ஒழிப்பு துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையான பொருட்களை ஒப்படைக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1991 முதல் 1996 வரை தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் முடிவில், சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது குறிப்பிடதக்கது