Homeசெய்திகள்மீண்டும் ஆங்கில மொழியில் எல்.ஐ.சி இணையதளம்!

மீண்டும் ஆங்கில மொழியில் எல்.ஐ.சி இணையதளம்!

-

- Advertisement -

எல்.ஐ.சி இணையதள பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளறே காரணம் என்றும், சிரமத்திற்கு வருந்துவதாகவும் எல்.ஐ.சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி யின் இணையதள பக்கம் ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை எல்.ஐ.சி இணையதள பக்கம் இந்தி மொழியில் மாறியது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், எல்.ஐ.சி இணையதள பக்கம் மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தங்கள் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் மொழி மாற்றம் செய்யும் பக்கம் செயல்படவில்லை.

தற்போது பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளதகாவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்ஐசி இணையதளம் ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளிலும் பயன்படுத்தும் விதமாக கிடைப்பதாகவும், சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

MUST READ