Homeசெய்திகள்தமிழ்நாடுமரக்காணம் கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

மரக்காணம் கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

-

- Advertisement -

 

மரக்காணம் கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
File Photo

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியார்குப்பத்தில் கடற்கரையோரத்தில் உள்ள வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் தேர்வு- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!

அங்கு சாராய பாக்கெட்டுகளை வாங்கிக் குடித்தவர்கள், வீட்டிற்கு சென்றதும் மயங்கி விழுந்துள்ளனர். உறவினர்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அந்த பகுதியில் சோதனை நடத்திய போது, சாராயம் குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்த மேலும் பலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடற்கரையோரம் யாராவது மயங்கி உள்ளனரா என காவல்துறையினரும், பொதுமக்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, மேலும் சிலரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக, ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கக்கடலில் அதி தீவிர புயல் ‘மோகா’!

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மரக்காணத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் பழனி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்நிலைய ஆய்வாளர் உள்பட காவல்துறையினர், நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 10- க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

MUST READ