Homeசெய்திகள்தமிழ்நாடுபாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்களின் பட்டியல்…கடும் நடவடிக்கை…பள்ளிக்கல்விதுறை தகவல்

பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்களின் பட்டியல்…கடும் நடவடிக்கை…பள்ளிக்கல்விதுறை தகவல்

-

- Advertisement -

பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேலும் பணியாளர்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டம் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்களின் பட்டியல்…கடும் நடவடிக்கை…பள்ளிக்கல்விதுறை தகவல்பொதுவாக பாலியல் புகாரில் சிக்கும் அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர்கள் சில நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதும், மீண்டும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று இடைக்கால நிவாரணத்தில் இருக்கும் பொழுது மற்றொரு பள்ளியில் பணியில் சேரக்கூடிய நிலை காணப்படுகின்றது. இதனை முற்றிலும் தவிர்ப்பதற்கும், பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக  விதிகளை திருத்தம் மேற்கொள்வது குறித்து குழந்தைகள் நல ஆணையம்,  காவல்துறை உள்ளிட்டோருடன் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 238 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது விசாரணை அதிகாரிகள் விரைந்து விசாரித்து முடிவெடுக்க அமைச்சர் அன்பில் அறிவுறுத்தியுள்ளார். புகார்கள் சிக்கி வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் தவிர்த்து, புகாருக்கு உள்ளானவர்கள் குறித்தும் முழுமையாக விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.பள்ளி மாணவர்கள் மீதான பாலியல் தாக்குதல் முற்றிலும் தடுக்க அதிகபட்ச நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

கல்வியில் காவியைப் புகுத்தும் பாஜக அரசு – திமுக மாணவர் அணி கண்டனம்..!

MUST READ