Homeசெய்திகள்தமிழ்நாடுமலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட பல்லிகள் பறிமுதல்!

மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட பல்லிகள் பறிமுதல்!

-

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட பள்ளி, ஓணான் இனங்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வன விலங்குகள் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன் பேரில், சிங்கப்பூரில் இருந்து வந்த ஆண் பயணியை வான்நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவர் தனது உடமையில் மறைத்து வெளிநாட்டு பள்ளி மற்றும் ஓணான் இனங்களை கடத்திவந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து கொண்டுவரப்பட்ட 55 பல்லி மற்றும் ஓணான் வகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ஆண் பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்குகளை வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளனர். வனத்துறையினர் ஆய்வுக்கு, இதனை மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்ப உள்ளதாக தகவல் அதிகாரிகள் தெவித்துள்ளனர்.

MUST READ