Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோ - மினி லாரி நேருக்கு நேர் மோதல்... 3 பக்தர்கள்...

திருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோ – மினி லாரி நேருக்கு நேர் மோதல்… 3 பக்தர்கள் பலி

-

திருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோவும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சிறுவன் உள்ளிட்ட 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள கீழச் செக்காரக்குடிய சேர்ந்த கிராம மக்கள் நேற்று முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்துள்ளனர். பின்னர் அவர்கள் லோடு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

திருச்செந்தூர் அடுத்த கல்லாமொழி அனல்மின் நிலையம் அருகே சென்றபோது லோடு ஆட்டோ முன்னால் சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது,எதிர்பாராத விதமாக எதிரே வந்த மினி லாரி உடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் லோடு ஆட்டோ ஓட்டுநர் சுடலை வீரன்,  சிறுவன் வடிவேலு மற்றும் பெரும்படையான் உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் படுகாயம் அடைந்த சுடலை வீரன்,  சிறுவன் வடிவேலு மற்றும் பெரும்படையான் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பெரும்படையான் (20), பெருமாள் (25) ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிறுவன் வடிவேலுவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் திருநெல்வேலியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ