மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை புறநகர் ரயில் சேவையை நாளை (டிச.06) தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து நாளை (டிச.06) ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமர்சனம் எழுதும் ஜோக்கர்களை பிடிக்காது… சந்தீப் ரெட்டி பேச்சால் சர்ச்சை…
அதே சமயம், இன்று (டிச.05) மதியம் 02.00 மணி முதல் சில வழித்தடங்களில் மின்சார ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்- தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் 30 நிமிடங்கள் இடைவெளியிலும், சென்னை கடற்கரை- திருவள்ளூர்- அரக்கோணம் வழித்தடத்தில் 30 நிமிடங்கள் இடைவெளியிலும், திருவொற்றியூர்- கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஒரு மணி நேரம் இடைவெளியிலும் புறநகர் மின்சார ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான்… களத்தில் இறங்கி மீட்பு…
இதே அட்டவணைப்படி, நாளையும் (டிச.06) புறநகர் ரயில் சேவைகள் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.