Homeசெய்திகள்தமிழ்நாடு'மக்களவைத் தேர்தல் 2024'- தமிழகத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு!

‘மக்களவைத் தேர்தல் 2024’- தமிழகத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு!

-

 

'மக்களவைத் தேர்தல் 2024'- தமிழகத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 19) காலை 07.00 மணிக்கு தொடங்கியது.

நடிகை சம்யுக்தாவின் ஆதிசக்தி… தனுஷ் பட நடிகையின் புது முயற்சி…

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் இன்று (ஏப்ரல் 19) காலை 06.45 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, சரியாக இன்று காலை 07.00 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் காலை முதலே வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

அதேபோல், தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கவின் நடிக்கும் ஸ்டார்… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வாக்குச்சாவடி மையங்களில் செய்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். வாக்குச்சாவடி மையங்களில் மாநில காவல்துறையினருடன், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ