Homeசெய்திகள்தமிழ்நாடு"எந்த அணிக்குச் செல்கிறது தே.மு.தி.க.?- பிப்.07, 08- ல் ஆலோசனை!

“எந்த அணிக்குச் செல்கிறது தே.மு.தி.க.?- பிப்.07, 08- ல் ஆலோசனை!

-

- Advertisement -

 

போதும் பிரேமலதா இப்படி பண்ணாதீங்க.... கண்ணீருடன் கோரிக்கை விடுத்த விஜயகாந்த் ரசிகர்கள்!

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வரும் பிப்ரவரி 07, 08 ஆகிய தேதிகளில் தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் – டிடிவி தினகரன்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 07, 08 ஆகிய தேதிகளில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில், மக்களவைத் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, கட்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளார். அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைக்க முயற்சிக்கும் நிலையில், மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெறவுள்ளது.

பொய்களால் கோர்க்கப்பட்ட மோசடி பட்ஜெட் – திருமாவளவன் விமர்சனம்

தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ