மக்களவைத் தேர்தலுக்கு பிறகு செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படவிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
“கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்…”- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களில் கடைசியாக, கடந்த 2021- ஆம் ஆண்டு 20% கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தினர். இந்த நிலையில், வரும் ஜூலை மாதத்திற்கு பிறகு 15% முதல் 17% உயர்வு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் இந்த கட்டண உயர்வை ஏர்டெல் நிறுவனமே கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. இதன் மூலமாக ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்து அந்நிறுவனத்திற்கு கிடைக்கும் நிகர லாபம் 208 ரூபாயில் இருந்து 286 ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுத்தை அச்சம்- அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!
ஏர்டெலை தொடர்ந்து ஜியோ, வோடபோன்- ஐடியா நிறுவனங்களும் கட்டண உயர்வை அறிவிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.