Homeசெய்திகள்தமிழ்நாடுஉயர் நீதிமன்ற நீதிபதி மீது லோக்பால் அமைப்பு வழக்கு: விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம்

உயர் நீதிமன்ற நீதிபதி மீது லோக்பால் அமைப்பு வழக்கு: விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம்

-

- Advertisement -

நீதிபதி ஒருவர் மீது லோகபல் அமைப்பு வழக்கு பதிவு செய்த விவகாரம் தொடர்பான ஒரு புகாரை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றம் வழக்கை எடுத்தது விசாரணையை மேற்கொண்டுள்ளது.உயர் நீதிமன்ற நீதிபதி மீது லோக்பால் அமைப்பு வழக்கு: விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம்அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அபய்.எஸ்.ஓஹா அடங்கிய  சிறப்பு அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, லோக்பால் அமைப்பு உயர்நீதிமன்ற நீதிபதி மீது வழக்கு பதிவு செய்த விவகாரத்தில் உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும். உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், கண்டிப்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த விவகாரம் கவலை அளிப்பதாக உள்ளது என்று  தெரிவித்தனர்.  பின்னர், நீதிபதி மீது லோக்பால் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும், லோக்பால் அமைப்பும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 18ம் தேதி ஒத்திவைத்தனர். மேலும், புகார்தாரரான நீதிபதியின் பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்றும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

உலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்தாமல் இந்தியை திணிப்பது அவசியமா? – ஜெயபிரகாஷ் காந்தி கண்டனம்

MUST READ