சீர்காழி அருகே டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து- 4 பேர் பலி
சீர்காழி அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தந்தை, மகன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பாதரக்குடி புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது, பின்னால் வந்து மோதிய அரசு விரைவு பேருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரின் மீதும் மோதியது. இதில் சம்பவ இடத்திலே மூன்று பேரும் உயிரிழந்தனர் மேலும் பேருந்து நடத்துனர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.
விபத்தில் 4 பேர் இறந்த சம்பவம் சீர்காழி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 20 நபர்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சீர்காழி திமுக எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் சந்தித்து ஆறுதல் கூறினர். சம்பவ இடத்தையும் பார்வையிட்டு விசாரணை செய்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல வாகன ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஆட்சியர், இரங்கலை தெரிவித்தார். மேலும் விபத்தை ஏற்படுத்திய பேருந்து, லாரி ஓட்டுநர்களை சீர்காழி போலீசார் கைது செய்தனர்.