
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை (மே 09) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும். அதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மே 10- ஆம் தேதி அன்று புயல் உருவாகிறது. புயல் வங்கதேசம் மற்றும் மியான்மரை நோக்கி நகரும். புயல் முதலில் வடமேற்கு திசையிலும், பின்னர் வடகிழக்கு திசையிலும் நகர்ந்து செல்லும்.
சூப்பர் ஸ்டாருக்கு இவ்ளோ மோசமான டிசைனா? கேலிக்கு ஆளாகும் லால் சலாம் போஸ்டர்!
தமிழகத்தில் இன்று (மே 08) 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த மே 1- ஆம் தேதி முதல் தற்போது வரை இயல்பை விட 114% மழை பெய்துள்ளது.” இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.