Homeசெய்திகள்தமிழ்நாடுஎம்.எஸ். சுவாமிநாதனுடைய உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

எம்.எஸ். சுவாமிநாதனுடைய உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

-

எம்.எஸ். சுவாமிநாதனுடைய உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுடைய உடல் அரசின் சார்பில் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Image

இந்தியாவின் பஞ்சத்தைப் போக்குவதற்காக பசுமைப் புரட்சி ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் வயது மூப்பின் காரணமாக சென்னையில் கடந்த வியாழக்கிழமை காலமானார். அவருடைய உடலானது தரமணியில் உள்ள எம்.எஸ் சுவாமிநாதன் பவுண்டேஷன் வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உட்பட மற்ற கேரளா தெலுங்கனா மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

Image

சனிக்கிழமை 11 மணி அளவில் அவரது உடல் தரமணியில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு பத்து காவலர்கள் மூன்று சுற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள்கள் சௌமியா, மதுரா, நித்யாராவ் உள்ளிட்டோர் இறுதி சடங்குகளை செய்தனர். மேலும், கேரள அமைச்சர்கள் கிருஷ்ணன் குட்டி, பி.பிரசாத், தெலங்கானா அமைச்சர் நரேந்திர ரெட்டி ஆகியோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்பு எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

MUST READ