Homeசெய்திகள்தமிழ்நாடுதீர்ப்பில் 'மாமன்னன்' படத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதி!

தீர்ப்பில் ‘மாமன்னன்’ படத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதி!

-

 

தீர்ப்பில் 'மாமன்னன்' படத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதி!
File Photo

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றில் வழங்கிய தீர்ப்பில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘மாமன்னன்’ படத்தை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

அண்ணாமலையின் நடைபயணம் குறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

கடந்த 2014- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தஞ்சை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக கருப்பு முருகானந்தம் போட்டியிட்டார். அப்போது, அவர் வாக்குச்சேகரிக்க வந்த போது, ஏற்பட்ட வன்முறைகளால் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், அதற்கு இழப்பீடு கோரியும் முகமது என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு கதாபாத்திரம் எதிர்கொண்ட பிரச்சனைகளை நிஜமாகவே கருப்பு முருகானந்தம் எதிர்கொண்டுள்ளார். வாக்குச் சேகரிக்க சென்ற போது, கருப்பு முருகானந்தம் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதுபோன்று ஜனநாயக கடமையைத் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்!

இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள், எதிர் குற்றச்சாட்டுகள் உள்ளனர் என்றும், இதனால் கீழமை நீதிமன்றங்கள் தான் முடிவெடுக்க முடியும் என்றும், நீதிபதி தெரிவித்தார்.

MUST READ