Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதி மன்றம்...

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

-

- Advertisement -

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில்,  சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை தெரிவித்ததாக,   வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் கே.சி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், திருப்பத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் நீதிபதி உத்தர்விட்டார்.

வங்கிகளை வசூல் முகவர்களாக மாற்றிய பாஜக அரசு – கார்கே கண்டனம்

MUST READ