பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு!
சிதம்பரம் கோயிலில் சிறுமிக்கு தாலிக் கட்டியது தொடர்பான வழக்கு இன்று (ஜூலை 10) பிற்பகல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர்மோகன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலிக் கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என்ற விளக்கத்தை ஏற்பதாக அறிவித்துள்ள நீதிபதிகள், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதைத் தவிர்க்க தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டனர். மேலும், புகாருக்குள்ளானோர் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் இருவரையும் குழந்தைகளாகக் கருத வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், தருமபுரியில் இளம் வயது திருமண புகார்கள் பற்றி இருவர் நடத்தப்பட்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
திமுகவினர் பயன்பெறவே மகளிர் உதவித் தொகை- தம்பிதுரை எம்பி
இதனிடையே, காவல்துறையின் விளக்கத்தை ஏற்று சிறுமிக்கு தாலிக் கட்டிய விவகாரம் குறித்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.