Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி- டெண்டர் கோரியது மத்திய அரசு!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி- டெண்டர் கோரியது மத்திய அரசு!

-

 

'மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்'- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!
File Photo

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரைக் கோரியுள்ளது மத்திய அரசு.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி 27- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், மதுரை மாவட்டம், தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது.

அதில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் செப்டம்பர் 18- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை 33 மாதங்களில் முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வருகின்றன.

சந்திரயான்- 3 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படங்கள் வெளியீடு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2026- ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசின் இத்தகைய அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

MUST READ