Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை காமராஜர் பல்கலை., மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் கைது

மதுரை காமராஜர் பல்கலை., மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது

-

மதுரை காமராஜர் பல்கலை., மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பயிலும் மாணவிகளிடம் அத்துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாகவும்,  ஆபாச வார்த்தைகள் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலமுறை புகார் அளித்தும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட  மாணவிகள் சிலர் இதுகுறித்து மதுரை சரக டிஐஜி பொன்னியிடம் புகார் அளித்தனர். மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த டிஐஜி உத்தரவிட்டார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையில் பணியாற்றி வரும் மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் கருப்பையா என்பவரை நேற்று இரவு கைது செய்தனர். விசாரணைக்குப் பின் பேராசிரியரை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையிலடைத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவிகளை ஒருமையில் திட்டியும் சாதிப் பெயரைச் சொல்லி அவதூறாக பேசிய பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ