அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பொது நூலகத்தைப் பார்வையிட்டப் பின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பிரமாண்ட அறிவுக் கருவூலம் ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’, வரும் ஜூலை 15- ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பொது நூலகத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது!
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட நடிகர்!
140 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இந்நூலகத்தின் கீழ் 25- க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு பருவத்தினருக்குமான நூல்களை வகைப்படுத்தி, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் நிர்வகித்து வருகின்றார்கள். நூலக நிர்வாகத்தினருடன் உரையாடியபோது, நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பிரமாண்டம் என் கண்முன் விரிந்தது!
ஆம்… சான் பிரான்சிஸ்கோ பொது நூலகத்தை விடவும், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப்பெரும் பரப்பளவில் பிரமாண்டமாக மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணி தமிழனாக பெருமையடைந்தேன். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்கப்படவுள்ள இலட்சக்கணக்கான புத்தகங்களின் வழியாக கலைஞர் என்றும் புகழப்படுவார்!
ரன்வீர் கபூரின் அனிமல் ரிலீஸ் தேதியில் மாற்றமா?…… இயக்குனர் விளக்கம்!
உலகம் போற்றும் நூலகம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரையில் ஜூலை 15- ஆம் தேதி திறக்கப்படவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.