Homeசெய்திகள்தமிழ்நாடுவிசாரணை கைதி உயிரிழப்பு- குடும்பத்தினர் போராட்டம்!

விசாரணை கைதி உயிரிழப்பு- குடும்பத்தினர் போராட்டம்!

-

 

விசாரணை கைதி உயிரிழப்பு- குடும்பத்தினர் போராட்டம்!

மதுரையில் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

பிரபலமான குளிர்பான பாட்டிலுக்குள் ரப்பர் பொருள்!

மதுரை மாவட்டம், மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான கார்த்திக் என்பவரை வழிப்பறி வழக்கில் கடந்த ஏப்ரல் 02- ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்திருந்தனர். விசாரணைக்கு பின் மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு அடுத்த நாளே கார்த்திக்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி அன்று இரவே அவர் உயிரிழந்தார். சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் உடல்நலக்குறைவால் கார்த்திக் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!

எவ்வித இணைநோயும் இன்றி ஆரோக்கியமாக இருந்த இளைஞர் எப்படி உயிரிழந்தார் என்றும், அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதே கார்த்திக்கின் உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறி, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

MUST READ