Homeசெய்திகள்தமிழ்நாடுOLX மூலம் ரூ.45 லட்சம் ஏமாற்றியவர் கைது

OLX மூலம் ரூ.45 லட்சம் ஏமாற்றியவர் கைது

-

OLX மூலம் ரூ.45 லட்சம் ஏமாற்றியவர் கைது

மதுரையில் ஒரே வீட்டை 6 பேருக்கு ஒத்திக்கு கொடுப்பதாகக் கூறி, 45 லட்சம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மதுரையில் லீசுக்கு வீடு கொடுப்பதாகக்கூறி, ஓஎல்எக்ஸில் விளம்பரம் கொடுத்து 6 பேரை ஏமாற்றிய மோசடி மன்னனை போலீசார் கைது செய்துள்ளனர். 47 லட்சம் மோசடி வழக்கில் கைதாகி சிறையிலிருந்து வெளிவந்தவர், தற்போது 45 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் சிறை சென்றுள்ளார்.

மதுரை ஆனையூர் பகுதியில் அமைந்துள்ள மலர் நகர் ரோஜாமலை தெருவைச் சேர்ந்தவர் 41 வயது ஸ்ரீபுகழ் இந்திரா. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தான் வசித்து வரும் வீட்டை 8 லட்சம் ரூபாய்க்கு ஒத்திக்கு விடுவதாக OLX இணையதளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த சிலர் வீடு ஒத்திக்கு வேண்டுமென ஸ்ரீ புகழ் இந்திராவை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அவர்களை நேரில் அழைத்துச் சென்று தன் வீட்டை காட்டி ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் முன்பணத்தையும் வாங்கிக்கொண்டு 15 நாட்களில் வீட்டை ஒப்படைத்து விடுவதாக கூறியுள்ளார். ஒரு மாத காலமாகியும் வீடு ஒப்படைக்காததால் பணம் கொடுத்தவர்கள் ஸ்ரீ புகழ் இந்திராவை தொடர்பு கொண்டு கேட்ட நிலையில், வீடு வேலை நடப்பதாகவும், ஒரு மாதத்தில் ஒப்படைத்துவிடுவதாக மழுப்பலாக பதிலளித்ததாக கூறப்படுகின்றது.

பணம் கொடுத்தவர்கள் சந்தேகைமடைந்து நேரடியாக ஸ்ரீ புகழ் இந்திராவின் வீட்டிற்கு செல்லவே அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் அவர்களை மிரட்டி அனுப்பியுள்ளது. இதனையடுத்து ராஜேந்திரன், சரோஜா, பாலமுருகன் உட்பட 6 பேர் மதுரை கூடல் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததனர். அதன் அடிப்படையில் ஸ்ரீ புகழ் இந்திராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஸ்ரீ புகழ் இந்திரா 6 பேரிடமும் தலா 6 லட்சம் மற்றும் 8 லட்சம் ரூபாய் என மொத்தமாக 45 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ