கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1ரூபாய் சோதனை குறுஞ்செய்தி வெற்றி
வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி முதல் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்ட விதிமுறைகளைப் பூர்த்திச் செய்த 1.05 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்ட விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பத்தாரர்களின் பதிவுச் செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் செப்.18- ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பத்தாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்திப் பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம்.
மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வுக் காணப்படும் என்று சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறைத் தெரிவித்துள்ளது.
உரிமைத் தொகை- ஏன் விண்ணப்பம் நிராகரிப்பு?
வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராக செயல்படுவார் என்றும், மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வாயில மட்டுமே செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.