- Advertisement -
சட்டவிரோதமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே. முன்னால் கடற்படை வீராரான இவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த ஊழல் வழக்கை இலங்கை குற்ற புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு யோஷித ராஜபக்சேவுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், யோஷித ராஜபக்சே குற்ற செயலில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இலங்கை குற்ற புலனாய்வு போலீஸார் அவரை கைது செய்தனர். இதேபோன்று இலங்கையின் முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணை தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.