மாமன்னன் தடை வழக்கு- அனைவருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளது: நீதிமன்றம்
மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு தடை விதிக்க கோரிய மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது நீதிபதிகள் அறிவித்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். கடைசியாக இவர் எடுத்த கர்ணன் படத்தில் கொடிக்குளம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வெளியாக உள்ள படம் மாமன்னன் இப்படம் ஜூலை 29ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனுடைய பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனையை காட்டும் விதமாகவே அமைந்துள்ளது. இப்படம் வெளிவந்தால் இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்படத்தை தடை விதிக்க கோரி பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, 29.06.2023 அன்று மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், இப்படத்தை திரையிலோ, எந்த OTT போன்ற வேறு ஏதேனும் தளத்திலோ ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும். என மனுதாரர் மணிகண்டன் தரப்பின் வழக்கறிஞர் முறியீடு வைத்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம் உள்ளது எனவே படம் குறித்த தடை விதிப்பது சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு எடுக்க முடியாது என தெரிவித்தனர். மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை பாதுகாப்பது குறித்து காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள் என கூறி வழக்கு விசாரணைக்கு எடுக்க மறுத்துவிட்டனர்.