திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் சாரை பாம்பை சமைத்து சாப்பிட்டதில் வனத்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள சாரை பாம்பு ஒன்றை பிடித்து கொன்று தோல் உரித்து கறியாக்கி அதனை சாப்பிட்டுள்ளார். இதனை அவர் சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதில் விசாரணையில் ராஜேஷ்குமார் சாரை பாம்பை தோல் உரித்து அதனை சமைத்து கரியாக்கி சாப்பிட்டதும் தெரிய வந்தது. பின்னர் அவரை வனத்துறையினர் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.