- Advertisement -
தெரு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர் கைது
திருச்சியில் தெரு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி பாலக்கரை காஜாபேட்டையைச் சேர்ந்தவர் சையது உசேன் (வயது 46). அவர் வீட்டருகே நின்ற தெரு நாய் ஒன்று ஓயாமல் குறைத்துக் கொண்டிருந்தது. அவர் பலமுறை நாயை விரட்டியும் நாய் போகாததால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற சையது உசேன், தனது வீட்டிலிருந்த பிஸ்டல் துப்பாக்கியை எடுத்து சுட்டதில் சம்பவ இடத்திலேயே அந்த நாய் இறந்து விட்டது.
இதுகுறித்து அவரது வீட்டருகே வசித்து வரும் பழனியப்பன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து சையது உசேனிடம் விசாரணை மேற்கொண்டு விலங்குகள் வதை தடுப்பு சட்டம், அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருத்தல் ஆகிய வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய பிஸ்டல் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.