பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் மரணம். விரும்பி சாப்பிட்ட உணவால் உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருகருணை கிராமத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் வயது 28. இவர் அந்த பகுதியில் ஊராட்சி வார்டு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் நண்பரின் சுப நிகழ்ச்சிக்கு நேற்று இரவு மதுராந்தகம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது இரவு அவர் விருந்தில் போட்ட விருப்பமான பரோட்டாவை விரும்பி சாப்பிட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீடு திரும்பிய மோகனசுந்தரத்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் இவர் ஏற்கனவே இருந்துவிட்டார் என தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சித்தாமூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரோட்டா சாப்பிட்டு வாலிபர் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.