விழுப்புரத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு 5.70 கோடி மதிப்பில் மணிமண்டபம் திறந்து வைத்த தமிழக முதல்வர்க்கு நன்றி தெரிவித்து காடுவெட்டி குரு மகள் குரு விருதாம்பிகை வன்னியர் சங்கம் என்று ஒட்டிய சுவரொட்டி.கடந்த 1987 ஆம் ஆண்டு வன்னியர் சமூக இட ஒதுக்கீடு போராட்டத்தில் அப்போதைய அதிமுக அரசால் 21 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியளித்திருந்தார் .இந்நிலையில் முதல்வர் அறிவித்தப்படி விழுப்புரம் அடுத்த வழுதரெட்டி பகுதியில் (சென்னை திருச்சி நெடுஞ்சாலை ஒட்டியவாறு) ரூபாய் 5.70 கோடி மதிப்பில் 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு இதனை கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார்.
முதல்வர்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் , முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பாமகவின் ஓர் அங்கமான வன்னியர் சங்க தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகளான “குரு விருதாம்பிகை வன்னியர் சங்கம்” என்ற பெயரில் நன்றி தெரிவித்து விழுப்புரம் முழுவதும் சுவரொட்டி(போஸ்டர்) ஒட்டி உள்ளார். அந்த போஸ்டரில் முதல்வர் படம் மற்றும் குரு படமும் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு அதிகமாக வழங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் சிவி கணேசன் பெருமிதம்