Homeசெய்திகள்தமிழ்நாடுமனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி வீட்டில் ஆவணங்களைப் பறிமுதல் செய்த என்ஐஏ அதிகாரிகள்!

மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி வீட்டில் ஆவணங்களைப் பறிமுதல் செய்த என்ஐஏ அதிகாரிகள்!

-

 

மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி வீட்டில் ஆவணங்களைப் பறிமுதல் செய்த என்ஐஏ அதிகாரிகள்!

சென்னை பெரம்பூர் தில்லைநாயக்கன் ஐந்தாவது தெருவில் வசித்து வருபவர் முகமது அப்துல்லா பாஷா. இவர் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். மனிதநேய மக்கள் கட்சி வடசென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவில் பொறுப்பு வகித்து வருகிறார்.

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

இந்த சூழலில், தேசிய புலனாய்வு ஆய்வாளர் பிரசாந்த் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு இருந்ததாகக் கூறி அவரது வீட்டில் யாரையும் வெளியே விடாமல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நான்கு மணி நேரம் சோதனைக்கு பிறகு முக்கிய ஆவணங்கள் மற்றும் 1 செல்போன், 2 சிம் கார்டுகள், ஆதார் அட்டை உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், வருகின்ற பிப்ரவரி 15- ஆம் தேதி சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முகமது அப்துல்லா பாஷாவிடம் சம்மன் வழங்கியுள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி வீட்டில் ஆவணங்களைப் பறிமுதல் செய்த என்ஐஏ அதிகாரிகள்!

“மெட்ரோ 2ஆம் கட்ட பணிக்கு ஒப்புதல் தேவை”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

வில்லிவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் என்ஐஏ சோதனையானது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

MUST READ