மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வுப் பெறவுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு வாழ்த்துகள். உங்கள் பதவிக்காலம் முழுவதும் பணிவு, புத்திகூர்மை உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தினீர்கள். உங்கள் அறிவு மற்றும் தொலைநோக்குப் பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
வெள்ள நிவாரணம்- தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!
சவாலான நேரங்களில் உங்களின் தலைமைத்துவம் எங்களுக்கு உத்வேகம் அளித்தது. நல்ல ஆரோக்கியம், எதிர்கால முயற்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்க வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.