நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையில் இடியுடன் வெளுத்து வாங்கும் கனமழை!
செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்திருந்தனர்.
அத்துடன் நடிகர் மன்சூர் அலிகானுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மனையும் அனுப்பியிருந்தனர். இதையடுத்து, நடிகர் மன்சூர் அலிகான், கடந்த வியாழன்கிழமை அன்று காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். அவரிடம் காவல்துறையினர், விசாரணையும் நடத்தினர்.
முன்னதாக, நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, உள்நோக்கத்துடன் மன்சூர் அலிகான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை….. யார் தெரியுமா?
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.