Homeசெய்திகள்தமிழ்நாடுகட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மன்சூர் அலிகான்!

கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மன்சூர் அலிகான்!

-

மன்சூர் அலிகான், 1991 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். அந்த வகையில் இவர் பல படங்களில் வில்லனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மன்சூர் அலிகான்!கடந்தாண்டு வெளியான லியோ, சமீபத்தில் வெளியான சரக்கு போன்ற படங்களில் நடித்திருந்தார். இதற்கிடையில் இவர் பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபட்டிருக்கிறார். இவர், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய வீடியோ ஒன்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இவர் அரசியல் களத்திலும் இயங்கி வருகிறார். இந்நிலையில் தான் மன்சூர் அலிகான், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று சென்னை வளசரவாக்கத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மன்சூர் அலிகான்!அதாவது சமீபத்தில் இவருடைய கட்சி லோக்சபா தேர்தல் தொடர்பாக அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருந்த நிலையில் அதிமுக உடன் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மன்சூர் அலிகான் திடீரென ட்விஸ்ட் கொடுத்துவிட்டார். இந்நிலையில் மன்சூர் அலிகான் தன்னிச்சையாக செயல்பட்டதன் காரணமாக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மன்சூர் அலிகான் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும் எனவும் தலைவருக்கு உண்டான அதிகாரங்கள் அனைத்தும் பொதுச் செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

MUST READ