Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு - முதலமைச்சர் பாராட்டு

தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு – முதலமைச்சர் பாராட்டு

-

தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு – முதலமைச்சர் பாராட்டு

உலக பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட, தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, உயரம் தாண்டுதலில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்றார்.

தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு - முதலமைச்சர் பாராட்டு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஜப்பான் நாட்டில் கோபே நகரில் நடைபெறும் 2024 பாரா தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாடு தடகள சாதனையாளர் மாரியப்பன் தங்கவேலுவை பாராட்டினார்.

ஜப்பான் நாட்டில் உள்ள கோபே நகரில் நடைபெற்று வரும் 2024 ‘பாரா அத்லெட்டிக்ஸ்’ தடகள விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவில், நேற்று (21.5.2024) உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற தமிழ்நாடு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் திரு.மாரியப்பன் தங்கவேலு அவர்கள் கலந்து கொண்டு 1.88 மீட்டர் உயரம் தாண்டி மாபெரும் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார் எனும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு - முதலமைச்சர் பாராட்டு

இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் மகத்தான பெருமையைத் தேடித்தந்துள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.

(3) M.K.Stalin on X: “A monumental leap to glory! Congratulations to Mariyappan Thangavelu for clinching gold in the men’s high jump T63 at the World Para Athletics Championships in Kobe, Japan. Here’s to even greater heights in the future! #MariyappanThangavelu #WorldParaAthletics https://t.co/MzhD5jj6hX” / X

மாரியப்பன் தங்கவேலு இந்த வெற்றியை பெறுவதற்காக மேற்கொண்ட கடுமையான பயிற்சிகளை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். இவர் வெற்றிக்குத் துணைபுரிந்துள்ள இவருடைய குடும்பத்தினர், பயிற்சியாளர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

MUST READ