Homeசெய்திகள்தமிழ்நாடுகேரளாவின் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு- சிக்கித்தவிக்கும் குடும்பங்கள்

கேரளாவின் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு- சிக்கித்தவிக்கும் குடும்பங்கள்

-

 

கேரளாவின் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு- சிக்கித்தவிக்கும் குடும்பங்கள்

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் ஏராளமான மக்கள் சிக்கி இருப்பதால் ராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் உதவிக்காக செல்கிறது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி குத்துமலை முண்டக்கை சூரல் மலை ஆகிய பகுதிகளில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சூரல் மலை பகுதியில் பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு சிக்கி உள்ளது. மீட்பு பணிக்காக தற்போது கேரள மாநிலத்தின் உடைய தீயணைப்பு துறை  அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதே போல தேசிய பேரிடர் மீட்பு படையும் அங்கு விரைந்து சென்று கொண்டிருக்கிறார்கள் மேலும் ராணுவத்தின் உதவியும் நாடப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக சூலூரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் உதவியும் கோரப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால் சேதம் மதிப்பு  என்ன என்பது குறித்தும் உயிரிழந்தவர்கள் குறித்த தகவலும் பின்னர் தெரியவரும் ,மேற்படி   16 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

வயநாடு நிலச்சரிவில் 20 பேர் பலி – பலியானர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் பிரதமர் மோடி

வயநாடு அருகே நிலச்சரிவு அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது தொடர் மழையால் கேரளா மாநிலம் முண்டகை – சூரல் மலை பகுதி உள்ளிட்ட பகுதிகள் மண் சரிவு ஏற்பட்டதின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் சூரல் மலை பாலம் அதிக வெள்ளத்தின் காரணமாக அடித்து செல்லப்பட்டதால் மீட்பு பணிக்கு செல்லும் வீரர்கள் தற்போது சம்பவ இடத்திற்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் மேலும் தீயணைப்புத் துறையினர் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபடும் போது காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டதாகவும் இதனால் ஏராளமான வாகனங்கள் அடித்து செல்லப்பட்டனர். மேலும் வீடுகளில் தண்ணீர் புகுந்ததாக பேரிடர் மீட்பு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

MUST READ