முதுநிலை நீட் தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.
முதுநிலை நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் 11ஆம் நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பல்வேறு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், டெல்லியில் நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில் முதுநிலை நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு தங்கள் இருப்பிடத்தில் இருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே தேர்வு மையங்களை குறைந்தபட்சம் அந்தந்த மாணவர்களின் மாநிலத்துக்கு உள்ளேயே மறு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
முதுநிலை நீட் தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டநி லையில், தற்போது அவை தமிழ்நாட்டிற்கு உள்ளேயே மாற்றி தேசிய தேர்வு முகமை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி திருச்சி மருத்துவர்களுக்கு தற்போது திருச்சி மற்றும் கரூரில் தேர்வு மை யம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மையங்கள் மாற்றப்பட்டது தொடர்பாக இ-மெ யில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.