Homeசெய்திகள்தமிழ்நாடு1500 கி.மீ பயணித்து தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்த மாதங்கி ரோந்து கப்பல்

1500 கி.மீ பயணித்து தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்த மாதங்கி ரோந்து கப்பல்

-

- Advertisement -

இந்திய கடற்படைக்கு சொந்தமான தானியங்கி ரோந்து கப்பல் மும்பையில் இருந்து 1500 கிலோ மீட்டர் பயணித்து வெற்றிகரமாக தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.‘

மத்திய அரசின் சாகர்மாலா பரிக்ரமா திட்டத்தின் கீழ் சாகர் டிபென்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் புதுமையான ரோந்து கப்பல் ஒன்றை வடிவமைத்துள்ளது. மாதங்கி என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோந்து கப்பல் முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக்கூடியது. இந்த ரோந்து படகு மும்பையில் இருந்து கார்வார் வரை சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது.

தொடர்ந்து மும்பையில் இருந்து தூத்துக்குடி வரை 1,500 கிலோ மீட்டர் தூரம் சோதனை நடைபெற்றது. இந்த பயணத்தை கடந்த 29ஆம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மும்பையில் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், அந்த ரோந்து கப்பல் சுமார் 1500 கடல் மைல் தொலைவு பயணம் மேற்கொண்டு இன்று காலை 11 மணி அளவில் தூத்துக்குடி வ.உ.சி- துறைமுகம் வந்தடைந்தது.

மாதங்கி ரோந்து படகிற்கு கடற்படை அதிகாரிகள் மற்றும் துறைமுக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாதங்கி ரோந்து கப்பல் பின்னர் தனது பயணத்தை தொடரும்.

 

MUST READ