Homeசெய்திகள்தமிழ்நாடுஎம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு

-

2024-25ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS) பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப்படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடுஜூலை 31ம் தேதி முதலாக மருத்துவ  கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கடந்த 14ம் தேதி முதலாக அகில இந்திய ஒதுக்கீடு அடிப்படையிலான நீட் தேர்வு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை இட தமிழ் நாட்டில் உள்ள  36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050  இடங்களும், இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும், 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3400 இடங்களும், தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்களும் மொத்தம் தமிழ்நாட்டின் 9050 மருத்துவ இடங்கள் உள்ளன. அதேபோல்  பிடிஎஸ் பல் மருத்துவ படிப்பில் மூன்று அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 250 இடங்களும் 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 1950 இடங்களும் என. மொத்தம் 2200 இடங்கள் உள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடுஇவற்றுள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எம்பிபிஎஸ் படிப்பில் 851 இடங்களும் பிடிஎஸ் படிப்பில் 38 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 14 ஆம் தேதி முதலாக அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான நீட் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில்  மாநில ஒதுக்கீட்டுக்கான மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்ட் 21ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

அதற்கான முதற்கட்ட கலந்தாவிற்கான தரவரிசை பட்டியலை  சுகாதாரத் துறை அமைச்சர் இன்று வெளியிடுகிறார். முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கிய பின்னர் அரசு பள்ளி மாணவர்கள 7.5% சிறப்பு  இட ஒதுக்கீடு,மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒதுக்கீடு முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு ஆகியவை  22ம் தேதி மற்றும் 23ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் தெரிவிக்கப்படுள்ளது.

MUST READ