தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான பொதுப்பிரிவிவு கலந்தாய்வு இணையவழியில் இன்று (ஜூலை 25) காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது. www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் தொடங்குகிறது.
நிதின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வெளியீடு!
7.5% இட ஒதுக்கீடு, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூலை 16- ஆம் தேதி வெளியானது. ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். கல்லூரி இடங்கள் ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணைகளை மாணவர்கள் ஆகஸ்ட் 4- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8- ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
அதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 8- ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும். தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் 6,326 மருத்துவ இடங்களும், 1,768 பல் மருத்துவ இடங்களும் உள்ளன.
ஹாலிவுட்டே சூர்யாவை வரவேற்கும்….. கங்குவா 2 & 3 ரெடி…. தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டில் 473 மருத்துவ இடங்களும், 133 பல் மருத்துவ இடங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.