சித்திரைத் திருவிழாவின் 10- ஆம் நாளில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. வைரக்கற்கள் பதித்த தங்க திருமாங்கல்யம் மீனாட்சியம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. மீனாட்சியம்மன் சார்பில் ஒரு பட்டரும், சுந்தரேஸ்வரர் சார்பில் ஒரு பட்டரும் மாங்கல்யத்தை அணிவித்தனர்.
லேடி கெட்டப்பில் கவின்….. வைரலாகும் க்யூட் போட்டோஸ்!
மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தின் போது பெண்களும் புதிய தாலியை அணிந்து மனமுருக வழிபட்டனர். வேத மந்திரங்கள் ஓத, மீனாட்சியை பெருமாள் தாரை வாரத்துக் கொடுத்ததை பக்தர்கள் பிரார்த்தித்தனர். சிவாச்சாரியர்கள் மாலை மாற்றுதல் மற்றும் பட்டு சாற்றுதல் நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெற்றது.
மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் திருமணக் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர். மதுரை அரசியான மீனாட்சி தேவர்களை எதிர்த்து திக்விஜயம் செய்ததைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சியம்மனுக்கு முத்துக்கொண்டை போட்டு, கையில் தங்கக்கிளி, தலையில் தங்கக்கிரீடம் அணிவிக்கப்பட்டது.
தங்கள் வீட்டு திருமணம் போல் பக்தர்கள் விருந்து உண்டு, மொய் எழுதும் பழக்கமும், நடைமுறையில் உள்ளது. திருக்கல்யாணம் நடைபெற்ற திருமண மண்டபம் 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நேரம் வந்தது….. ‘கல்கி 2898AD’ படத்தின் புதிய அப்டேட்!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையொட்டி, மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணத்தையொட்டி, மதுரையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று விரைவு புஷ்பப் பல்லக்கில் மீனாட்சியும், யானை வாகனத்தில் சுந்தரேஸ்வரரும் எழுந்தருள உள்ளனர்.