Homeசெய்திகள்தமிழ்நாடுமேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமிக்க பரிந்துரை!

மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமிக்க பரிந்துரை!

-

 

மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமிக்க பரிந்துரை!
Video Crop Image

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனை, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் நீட் பயிற்சி!

மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியின் ஓய்வை அடுத்து, எஸ்.வைத்தியநாதன் பெயர் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உச்சநீதிமன்ற கொலீஜியம் வெளியிட்டுள்ளது.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கோவையில் பிறந்தவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்திருக்கிறார். கடந்த 1986- ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய எஸ்.வைத்தியநாதன், கடந்த 2013- ஆம் ஆண்டு கூடுதல் நீதிபதியாகவும், 2015- ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் எஸ்.வைத்தியநாதன், 1219 வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

MUST READ