
காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் வழங்குவது மற்றும் மேகதாது அணை பிரச்சனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜூலை 02- ஆம் தேதி அன்று அளித்த செய்திகளுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து நொறுக்கி கொள்ளை முயற்சி
மூன்று பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், “மேகதாது அணைக்கட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு முறியடிக்கும். மேகதாதுவில் கர்நாடகா அணைக் கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, வலுவான வாதங்கள் முன் வைக்கப்படும். நடப்பாண்டு விவசாயத்திற்கு தடையின்றி நீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். மேகதாது அணை பிரச்சனையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்.
சென்னையில் உள்ள சாலைகள் அரசின் சாதனை- மு.க.ஸ்டாலின்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகத்திடம் பெற அனைத்து மட்டங்களிலும் முயற்சி செய்யப்படும். அரசியல் நிர்பந்தத்தினாலோ, என்னவோ அவ்வப்போது மேகதாது பிரச்சனையை கர்நாடகா எழுப்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.