ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர் மன்ற தலைவர் முகமது அமின் நெஞ்சுவலியால் இன்று உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர் மன்ற தலைவராகவும், மேல் விஷாரம் நகர 4வது வார்டு கவுன்சிலராகவும் திமுகவை சேர்ந்த முகமது அமீன் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை முகமது அமீனுக்கு திடீரென நெஞசுவலி ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் மேல் விசாரத்தில் உள்ள கே.எச். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது அமீன் உயிரிழந்தார்.