
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக நேரடி பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் முறை பயண அட்டை ‘QR CODE’ மூலம் பணம் செலுத்திப் பயணிக்கும் முறை ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.
அதிகார வர்க்கத்தினருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை – அடித்துச்சொல்லும் கார்த்தி சிதம்பரம்
அதன் தொடர்ச்சியாக, வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர்களான ராஜேஷ் சதுர்வேதி, அர்ச்சுனன் ஆகியோர் பங்கேற்று திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
இந்த புதிய வசதியின் மூலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாட்ஸ் அப் ‘QR CODE’- களை ஸ்கேன் செய்தோ (அல்லது) மெட்ரோ நிறுவனம் அளித்துள்ள 83000-86000 என்ற வாட்ஸ் அப் எண்ணில் ‘Hi’ என்ற குறுஞ்செய்தி அனுப்பியோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
முத்தமிழ்ச்செல்விக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர்!
முதலில் பயண விவரங்களைக் குறிப்பிட்டு, அதற்கான பணத்தை UPI மூலம் செலுத்தினால் ‘QR CODE’ பயணச்சீட்டு வாட்ஸ் அப் மூலம் கிடைக்கும். இந்த டிக்கெட்டை ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள ‘QR CODE’ ஸ்கேனரில் காண்பிப்பதன் மூலம் மெட்ரோ ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியும். சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, இந்த திட்டம் உதவும் என்று மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.