ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்து வீடு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக சென்னையில் இன்று இரவு 11 மணி முதல், அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்நிலையில் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ,சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இப்போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முதலாவது போட்டியில் மோதுகின்றன. இதுவரை இரு அணிகளும் 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. . இதில் சிஎஸ்கே அணி 20 முறையும் , பெங்களூர் அணி 10 முறை வென்றுள்ளது. `1 போட்டியானது முடிவில்லாமல் போனது.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்து வீடு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காகசென்னையில் இன்று இரவு 11 மணி முதல், அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் கருத்தில் கொண்டு, இன்று இரவு 11 மணிக்கு மேல் 23ஆம் தேதி அதிகாலை 01:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்பதை CMRL தெரிவித்துக்கொள்கிறது. 2024 சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் போட்டி முடிந்து பத்திரமாக வீடு திரும்ப வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்துக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து வசதிகளை வழங்க CMRL விரும்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.