Homeசெய்திகள்தமிழ்நாடுநவம்பரில் மெட்ரோ ரயிலில் 80 லட்சம் பேர் பயணம்!

நவம்பரில் மெட்ரோ ரயிலில் 80 லட்சம் பேர் பயணம்!

-

 

பிளே ஆஃப் போட்டி- பயணச்சீட்டு கட்டாயம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
File Photo

சென்னை மெட்ரோ ரயில்களில் நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் – கடைக்கு சீல்!

இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிகபட்சமாக கடந்த நவமபர் 10- ஆம் தேதி அன்று 3,35,677 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023 நவம்பர் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 32,33,705 பயணிகள் (Online QR 1,99,218; Static QR 1,46,485; Paper QR 24,37,942; Paytm 2,34,981: Whatsapp 2,11,758; PhonePe 3,321), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 39,98,883 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 56,505 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையைப் பயன்படுத்தி 3,769 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 7,08,351 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிநிறைவு விழா!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ் அப் டிக்கெட் Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 200% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ் அப் டிக்கெட் (+91-83000-86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ