Homeசெய்திகள்தமிழ்நாடுகர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பு - முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை

கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பு – முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை

-

கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபிணி அணை இரண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனையடுத்து இரு அணைகளில் இருந்தும் காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.27 அடியில் இருந்து 116.360 அடியாக உயர்ந்துள்ளது; கர்நாடக அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,52,903 கனஅடியில் இருந்து 1,53,091 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா பாசனத்துக்காக நீர் திறப்பு விநாடிக்கு 8000 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

MUST READ