மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால் குறுவை சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து காணப்படுகிறது.மேட்டுர் அணைக்கு நீர்வரத்து 33,040 கன அடியாக சரிந்தது.
காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.31 அடியாக உயர்ந்துள்ளது.மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிகரித்து வந்த நீரின் அளவு வினாடிக்கு 34,690 கனடியில் இருந்து தற்போது 33,040 கன அடியாக குறைந்து வருகிறது. அதேபோன்று அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 51.867
டிஎம்சியாக உள்ளது. இதனால் விவசாய பயன்பாட்டிற்கான குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.